தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி. மே 7ஆம் தேதி திமுக அரசு அமையவுள்ளது.
விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற உதயநிதி!
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
udhayanidhi stalin meet vijayakanth
இந்நிலையில், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று அவரை உதயநிதி நலம் விசாரித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் உடனிருந்தார்.