தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயந்திரக் கோளாறு... தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல் - stalin

சென்னை: சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபடுவதாக செய்திகள் வெளியாகிறது. அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

udhay

By

Published : Apr 18, 2019, 2:31 PM IST

Updated : Apr 18, 2019, 3:20 PM IST

தமிழ்நாட்டில் வேலூர் மக்களவைத் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கு தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா, ஸ்டாலின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “நான் என் கடைமையை செய்துவிட்டேன். மக்கள் அனைவரும் தங்களின் கடைமையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபடுவதாக செய்திகள் வெளியாகிறது.

அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டும் என்றே சொந்த ஊர்களுக்கு மக்களை செல்லவிடாமல் அரசு தடுக்க முயன்றது. அதையும் மீறி, மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கண்டிப்பாக திமுக வெற்றிபெறும்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Last Updated : Apr 18, 2019, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details