தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டையைப் பிடித்து நீட் வேண்டாம் என்றிருக்கலாம்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: காலைப் பிடித்து கமிஷன் அடிப்பதற்கு பதிலாக சட்டையைப் பிடித்து நீட் வேண்டாம் என்றிருந்தால் நம் பிள்ளைகள் உயிர் போயிருக்காது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhay
udhay

By

Published : Sep 13, 2020, 12:07 AM IST

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்துவருகிறது.

கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற இருக்கும் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகிவருகின்றனர். அதேசமயம், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் நேற்று மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவியும், தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவரும், திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

அனிதாவில் தொடங்கி மோதிலால் என தமிழ்நாட்டில் 8 மாணவர்கள் இதுவரை நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனைத் தடுப்பதற்கு நீட்டை ரத்து செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். எட்டு மாதங்களில் உங்கள் கனவு மெய்ப்படும்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், மோதிலால் தற்கொலை குறித்து, ”நீட் கொடுமைக்கு திருச்செங்கோடு மோதிலால் இன்றைக்கு 3-வது பலி. 'முயன்றோம்; முடியல' என அடிமைகள் கைவிரித்தது முதலே தற்கொலைகள் அதிகமாகின்றன. காலைப்பிடித்து கமிஷன் அடிப்பதற்கு பதிலாக சட்டையைப்பிடித்து நீட் வேண்டாம் என்றிருந்தால் நம் பிள்ளைகள் உயிர் போயிருக்காது” என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details