சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டுவந்த தட்டச்சு பாடங்களுக்கான தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் வகுப்புகள், 25 நாள்களில் முடித்துவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்கம் குறிப்பாணை அதில் பயிற்சி நிலையங்கள் (Training & Coaching Centres) செயல்படத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினால் தற்போது 39 மையங்களில் நடைபெற்றுவரும் தட்டச்சு பாடங்களில் தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், 30 நாள்கள் என்பதை 25 நாள்களாகக் குறைத்து இன்றுடன் (ஜனவரி 5) முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், அரசு வழிகாட்டுதலின்படி தேர்வு நடைபெறும் நாள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா பயமாக இருந்தால், பாகிஸ்தான் செல்லுங்கள்- பிரதமருக்கு காங்கிரஸ் அறிவுரை!