சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள அடையாறு பகுதியில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவ மழையின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை பெய்தது. இதனால் வழக்கத்தைவிட அடையாற்றில் செல்லும் நீரின் அளவு அதிகமாகச் சென்றது. குறிப்பாக சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர்ப் பகுதிக்கு அருகில், அரசு பண்ணை என்ற பகுதியில் செல்லும் அடையாற்றிலும் நீரின் வரத்து அதிகமாக உள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் குளிப்பதற்காகவும், மீன் பிடிப்பதற்காகவும் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு சிறுவர்களும் அடையாற்றில் மூழ்கி காணவில்லை. உடன் சென்ற சிறுவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சைதாப்பேட்டை காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து அடையாற்றில் மாயமான சிறுவர்களைத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சந்தோஷ் என்ற 10 வயது சிறுவனின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரீஸ் என்ற 14 வயது சிறுவன் உடலைத் தொடர்ந்து தேடும் பணியில் காவல் துறை, தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு