திருப்பத்தூர்மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த சேம்பரைப் பகுதியில் புலியூரில் இருந்து (ஏப்.2) பிக்கப் வேன் மூலம் பயணம் செய்த 38 பேர் விபத்துக்குள்ளாகினர். அந்தக் கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்து திருப்பத்தூர், தர்மபுரி, அடுக்கம்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த ஓரிரு மணி நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை அறிவித்ததுடன் விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2,00,000 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
தவிர்க்கப்பட வேண்டிய விபத்து: இதனைத்தொடர்ந்து, இன்று (ஏப்.4) புலியூர் கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சர் எ.வ.வேலு உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி, வழங்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலைகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் வழங்கினார்.
அப்போது, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், 'பிறப்பும் இறப்பும் இயற்கையானது என்றாலும், இந்த விபத்து மூலமாக அமைந்த உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த 2ஆம் தேதி டெல்லியில் இருந்த முதலமைச்சர் தொலைக்காட்சிகளில் விபத்து குறித்த செய்தியைப் பார்த்ததும் சுமார் ஒரு மணிநேரம் யாரிடமும் பேசவில்லை.