சென்னையை அடுத்த நொளம்பூரில் சென்னை குடிநீர் கழிவுநீரேற்ற பணிமனையில் வெல்டிங் வேலை செய்துவந்த கண்ணன் (45), பிரகாஷ் (24) ஆகிய இரண்டு பேரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர்.
விசாரணையில் பிரகாஷ் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கண்ணன் பாடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி இருவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெல்டிங் வேலைசெய்யும்பொழுது கண்ணன் தவறி விழுந்ததாகவும், அவரைக் காப்பாற்ற பிரகாஷ் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இந்நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பாலியல் தொல்லை: முதியவர் மீது பாய்ந்தது போக்சோ!