சென்னை:மயிலாப்பூர் ஆர்.கே மட் சாலையில் நேற்றிரவு (செப்.7) ரோந்து பணியில் இருந்த மயிலாப்பூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வினோத்குமார்(29) என்ற இளைஞரை சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு அபராதம் விதித்ததற்கான ரசீதை அளித்துள்ளனர்.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் சம்பவ இடத்தில் தனது வாகனத்தை எடுக்க முயன்றபோது, அப்போது அங்கு காத்திருந்த வினோத், காவலரின் பேட்டன் லைட்டை உடைத்ததுடன் தனது நண்பருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த அவரின் நண்பர் ராபர்ட்(27) உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் தகராறில் ஈடுபட்டதுடன் இருவரும் சேர்ந்து உதவி ஆய்வாளர் தலைமுடியை பிடித்து அடித்துள்ளனர்.