சென்னை:மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜி தலைமையில் பட்டூர் பகுதியில் போலீசார் இன்று (செப்.29) வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை மடக்கி விசாரிக்க முயன்றனர்.
ஆனால் வாகனம் வேகமாக நிற்காமல் சென்றது. விரட்டி சென்று மடக்கி பிடித்த போது வாகனத்தில் இருந்தவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது பிடிபட்டவர்கள் மவுலிவாக்கத்தைச் சேர்ந்த நிஜந்தன்(30), விஸ்வநாதன்(25) என்பது தெரியவந்தது.
சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது விசாரணையில், அவற்றை டெல்லியில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வந்தது தெரியவந்தது. இவ்விருவரும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத்திரை ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த 140 போதை மாத்திரைகள், ஒன்றைரை கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இதயம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! இன்று உலக இதய தினம்!!