தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கேபிள், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துக' - ககன்தீப் சிங் பேடி

கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Mar 15, 2022, 4:14 PM IST

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களின் தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் வயர்கள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டு தடவாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும், இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் சார்பில் தனிக் கம்பங்கள் அமைத்தும் இன்டர்நெட் வயர்கள் எடுத்துச்செல்லப்படுகிறது.

ஒழுங்குபடுத்தும் பணி

அதனடிப்படையில், மின்துறை மூலமாக தெருவிளக்கு கம்பங்களில் உள்ள உபயோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் நிறுவனங்களின் 74.60 கி.மீ. நீளமுள்ள வயர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 59.91 கி.மீ. நீளமுள்ள வயர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

நிலுவைத் தொகை

சென்னை மாநகராட்சியில், மின்துறை மூலமாக உபயோகமில்லாத மற்றும் தடவாடகை செலுத்தாத நிறுவனத்தின் வயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

எனவே, கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தடவாடகை மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சுற்றுலா செல்ல ரூ.1.25 கோடி செலவு செய்த எஸ்.பி.வேலுமணி : லஞ்ச ஒழிப்புத்துறை

ABOUT THE AUTHOR

...view details