நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 38 இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் டிடிவி தினகரன்.
டிடிவி-சசிகலா சந்திப்பு! - dinakaran
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார்.
சசிகலா - தினகரன்
அவர் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 39 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தது. பல இடங்களிலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவி சசிகலாவை, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஆர். கே. நகரின் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் இன்று சந்தித்துப் பேசினார்.