தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'காவிரி மேலாண்மை ஆணையத்தை மீட்க அதிமுக, திமுக அழுத்தம் தர வேண்டும்'

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர் ஆற்றல் அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது, உடனடியாக அதை ரத்துசெய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ttv
ttv

By

Published : Apr 29, 2020, 4:21 PM IST

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்துடன் போராடி தண்ணீர் பெறுவதைவிட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக நமது தேவைகளை ஓரளவு பெற முடிந்தது. இதன் நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தாலும், இரு மாநிலங்களுக்கிடையிலான சர்ச்சைகள் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கிவந்த காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு நதிநீர் ஆணையங்களை மத்திய நீர் ஆற்றல் அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீர் ஆற்றல் அமைச்சகத்துடன் காவிரி மேலாண்மை ஆணையம் இணைக்கப்பட்டாலும், அதன் தன்னாட்சி உரிமைகள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது.

ஆனாலும் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்னையைக் கையாளும் பொறுப்பைத் தருவது நியாயமாக இருக்காது.

தவிர, ஓர் அமைச்சகத்தின்கீழ் காவிரி நதி நீர்ப்பகிர்வு விவகாரத்தை கொண்டுபோவது, இந்தப் பிரச்னையைத் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். எனவே மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு இதைச் செய்வதற்கு தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி பழனிசாமியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும் உரிய அழுத்தங்களைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தன்னாட்சி அதிகாரம்? இனி மத்திய நீர் ஆற்றல் துறையின்கீழ் காவிரி மேலாண்மை வாரியம்

ABOUT THE AUTHOR

...view details