டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், புவனகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட 26 கிராமங்களில், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவினை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் கீழ் ஏற்கனவே மூன்று சுரகங்கள் இயங்கி வருகின்றன. தற்போது நான்காவது நாங்கள் சுரங்கத்தை அமைப்பதற்கான பணிகளை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.
இதற்காக விருதாச்சலம் மற்றும் புவனகிரி பகுதிகளில் 4842 ஹெக்டர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் 26 கிராமங்களை சேர்ந்த 8751 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.
மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை -டிடிவி கண்டனம் இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்றது. இதில் நிலக்கரி சுரங்கம் அமைக்க இடம் தர முடியாது என அப்பகுதி மக்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். ஏற்கனவே செயல்படும் சுரகங்களுக்கு என்.எல்.சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் அப்போது முன்வைத்தனர்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் என்.எல்.சி நிறுவனம் புதிய சுரங்கம் அமைக்க முனைவது கண்டனத்திற்குரியது” என கூறியுள்ளார்.
மேலும், இப்பகுதி மக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க....தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதியில்லை