தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி - AMMK party general secratary

அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharatடிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி
Etv Bharatடிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Sep 2, 2022, 10:09 AM IST

தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் பக்கத்தில், "சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நிதித்துறை அமைச்சர் காரின் மீது செருப்பு வீசிய மூவருக்கு முன்ஜாமீன்!

ABOUT THE AUTHOR

...view details