திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு டிடிவி இரங்கல் - இரங்கல்
சென்னை: மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நேற்று காலை ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் அமமுக-வின் செயல் வீரராக செயல்பட்ட மோகன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த செய்தி வேதனையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. மோகன் உட்பட ஆறு பேரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.