தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வழி நெடுக தோரணம் இல்லை, பேனர்கள் இல்லை..' - CM stalin Visit thanjavur

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திருச்சி பயணம் குறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா ட்வீட் செய்துள்ளார்.

டிஆர்பி ராஜா ட்வீட்
டிஆர்பி ராஜா ட்வீட்

By

Published : Jun 11, 2021, 2:18 PM IST

காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. ஆற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார்.

அங்கு கல்லணையில் ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சரின் திருச்சி பயணம் குறித்து எம்எல்ஏ டிஆர்பி ராஜா ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்,

டிஆர்பி ராஜா ட்வீட்

"தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக கல்லணை வருகிறார் முதலமைச்சர். வழி நெடுக தோரணம் இல்லை, பேனர்கள் இல்லை, கொடி இல்லை,

வரிசையாக வெயிலில் கால்கடுக்க நிற்கும் காவல் துறையினரும் இல்லை. மக்களோடு மக்களாக பயணிக்கும் முதலமைச்சர் இருந்தால் நாடு இப்படித்தான் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details