சென்னை துறைமுகத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு 32 சக்கரம் கொண்ட ட்ரைலர் லாரி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் மேம்பாலத்திற்கு கீழ் சென்றபோது, பாலத்தின் கீழ் டிரான்ஸ்பார்மர் சிக்கியது. டிரைவர் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை எடுக்க முடியவில்லை. பாலத்தின் உயரத்திற்கு லாரியில் வைக்கப்பட்டுருந்த டிரான்ஸ்பார்மர் இருந்ததால் மேம்பாலத்தில் வாகனம் சிக்கி அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே நின்றுது.
வாகனத்தை அங்கிருந்து அகற்ற கிரைன் மற்றும் இரண்டு புல்லர் லாரிகள் மூலம் போக்குவரத்து காவல் துறையினர் முயற்சி செய்தனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் பாலத்தின் கீழ் வாகனம் சிக்கிக்கொண்டதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.