தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில் பயணிகள் கவனத்திற்கு: வைகை, பல்லவன் ரத்து!

ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வைகை, பல்லவன் ரயில்கள் அக்டோபர் 20, 27ஆம் தேதிகளில் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

trains partially cancelled due to maintenance works
trains partially cancelled due to maintenance works

By

Published : Oct 12, 2021, 6:59 AM IST

மதுரை: ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை அக்டோபர் 20, 27 ஆகிய புதன்கிழமைகளில் விழுப்புரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இந்த நாள்களில் வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.

வண்டி எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை நவம்பர் 10ஆம் தேதி புதன்கிழமை அன்று செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இருந்தபோதிலும் நவம்பர் 10ஆம் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில், வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கம்போல இயங்கும்.

இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

ABOUT THE AUTHOR

...view details