தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே
15:32 November 24
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை (நவம்பர் 25) ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன் எதிரொலியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் இரண்டு மார்க்கத்திலும் நாளை ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயண கட்டணம் முழுவதுமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.