இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் தகுந்த இடைவெளியை பயன்படுத்தி 50 விழுக்காட்டினர் அமர்ந்து சாப்பிடவும், அனைத்து கடைகளும் மாலை 7 மணி வரை செயல்பட ஒரு மணி நேரம் விற்பனைக்கு அதிகப்படுத்தியும் உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோயம்பேடு சந்தையை திறக்க வணிகர்கள் கோரிக்கை! - கோயம்பேடு சந்தை
சென்னை: வியாபாரிகள், விவசாயிகள் நலன் கருதி கோயம்பேடு சந்தையை திறக்க வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
market
அதே நேரம், போதிய வசதிகள் இல்லாததால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் காய்கறி, பூ, பழம் உள்ளிட்ட சந்தைகளில், போதிய வியாபாரம் இல்லாமல் ஏராளமான பொருள்களை குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வியாபாரிகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறப்பு விமானங்கள் மூலம் 511 பேர் சென்னை வருகை