சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று 507 கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,794 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 1 ஆயிரத்து 938ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 ஆயிரத்து 768 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 6 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 52 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.