தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 23, 2020, 1:30 PM IST

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி- தமிழ்நாடு அரசு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை கரோனா பரவல் இல்லை - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா பரவல் இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் இயக்குனர் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள்!

கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கேரள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளநிலை கால்நடை மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.

'தன்னை அமைச்சராக்கிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் எடப்பாடி' கனிமொழி

தன்னை அமைச்சராக்கிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி : விசாரணைக் குழு அமைப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த புகார்களை விசாரணை செய்ய, நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் தனி நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் இந்த நிலை என்று வரும்... பிரதமரிடம் ராகுல் கேள்வி!

உலகின் பிற நாடுகளில் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், நம் நாட்டில் இந்த நிலை என்று வரும் என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள தனியார் விடுதியில் போதை மருந்துடன் ஆபாச நடனம் : 9 பேர் கைது

கேரள மாநிலம், வாகமண்ணில் தங்கும் விடுதியில் போதை மருந்தை உட்கொண்டு ஆபாச நடனம் ஆடிய பெண் உள்பட ஒன்பது பேரை கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.

பிரபல மலையாளக் கவிஞர் சுகதா குமாரி காலமானார்!

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல மலையாளக் கவிஞர் சுகதா குமாரி இன்று உயிரிழந்தார்.

பூடானில் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பூடானில் நாடு முழுவதும் இன்று தொடங்கி அடுத்த ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details