தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9 PM - 10 முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 9, 2021, 9:12 AM IST

1. அப்போதே மகேந்திரன் வந்திருந்தால் கோவையையே வென்று இருப்போம் - ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பே மகேந்திரன் திமுகவில் இணைந்திருந்தால், கோயம்புத்தூரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகேந்திரன் திமுகவில் இணையும் நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

2. ShareMe செயலியால் பணத்தை சுருட்டிய கும்பல் அதிரடி கைது

ஷேர் மீ (ShareMe) செயலியில் வீடியோக்களை லைக் செய்து, ஷேர் செய்தால் பணம் தருவதாக நம்பவைத்து பல லட்சங்களை சுருட்டிய கும்பலை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

3. அட்டாக் பாண்டி சிறை விடுப்பு மனுவுக்கு பதிலளியுங்கள் - உயர் நீதிமன்றக் கிளை

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் சிறைக் கைதி அட்டாக் பாண்டியின், 10 நாட்கள் அவசர விடுப்பு மனுவுக்கு, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4. இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை - சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

5. சென்னையில் காற்று மாசுபாடு இருமடங்கு அதிகம்: கிரீன்பீஸ் ஆய்வறிக்கை

காற்று மாசுபாடு (நைட்ரஜன் டை ஆக்சைடு) அதிகரித்துள்ள எட்டுத் தலைநகரங்களின் பட்டியலில் சென்னை நகரமும் அடங்கியுள்ளது என 'கிரீன்பீஸ்' இந்தியாவின் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

6. ஒன்றிய அமைச்சர் பதவி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது மகிழ்ச்சி - திருநாவுக்கரசர் எம்.பி

ஒன்றிய அமைச்சர் பதவி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழ்நாடு நலனுக்காக அவர் பாடுபட வேண்டும் எனவும் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

7. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பு - புள்ளி விவரங்களால் வெளியான அதிர்ச்சித் தகவல்

நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பின்னர், மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கையின்போது கிராமப்புறத்தில் படித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

8. பாடல்களை ஏலத்தில் விடும் ஜிவி பிரகாஷ்: டிஜிட்டல் உலகில் புது முயற்சி!

தான் இசையமைத்த ஆறு பாடல்களை புது முயற்சியாக ஒரு பைனான்ஸ் செயலி மூலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏலத்தில் விட இருக்கிறார்.

9. 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா': இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு

வின் டீசல் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' திரைப்படம் இந்தியாவில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

10. இளம் ரசிகருடன் அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகர் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் புது திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details