தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 PM - Top 10 News

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9 PM
9 PM

By

Published : Mar 31, 2021, 8:54 PM IST

1. கட்சி ஸ்டிக்கரில் எம்ஜிஆர், ஜெயலலிதா காணோம்: திமுகவில் இணைந்த அதிமுகவினர்!

சென்னை: கட்சி ஸ்டிக்கரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்த ராயபுரம் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

2. ஓய்வுபெற்றார் டிஜிபி சுனில்குமார்!

சென்னை: தமிழக காவல் துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டிஜிபி சுனில்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு காவல் உயர் அதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

3. 'பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்க பிரத்யேக செல்போன் எண் தரப்படும்' - பாமக வேட்பாளர்

தர்மபுரி: பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கப் பிரத்யேக செல்போன் எண் தரப்படும் என தர்மபுரி பாமக வேட்பாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

4. குடியரசுத் தலைவரின் உடல்நலம் குணமடைய தலாய் லாமா வாழ்த்து!

சிம்லா: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை விரைவில் குணமடைய திபேத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

5. ' ஊழல் செய்திருந்தால், ஏன் விசாரணை நடத்தவில்லை ? - நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி: ஊழல் செய்திருந்தால், ஏன் விசாரணை நடத்தவில்லை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

6. 20 அடி உயரத்தில் சுற்றும் பழங்குடியினரின் விநோதச் சடங்கு!

போபால்: பிரார்த்தனை நிறைவேறினால் அந்தரத்தில் கயிற்றில் சுற்றும் விநோதச் சடங்கை, பட்டேலியா பழங்குடியினர் பின்பற்றிவருகின்றனர்.

7. ஹெராயின் கடத்திய இலங்கைப் படகு சிறைப்பிடிப்பு: 6 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: ஹெராயின், ஆயுதங்களைக் கடத்திய இலங்கைப் படகைச் சிறைப்பிடித்த இந்தியக் கடலோரக் காவல் படை, இலங்கையைச் சேர்ந்த ஆறு பேரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.

8. 'கர்ணன்' எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் - தனுஷ்

சென்னை: 'கர்ணன்' திரைப்படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என நடிகர் தனுஷ் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

9. கோலியே கேப்டனாக நீடிக்க வேண்டும் : முன்னாள் அணி தேர்வாளர் கருத்து

விராட் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று சரந்தீப் சிங் கூறியுள்ளார்.

10. இங்கிலாந்தில் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலை: ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் டிவிஎஸ் நிறுவனம்

சென்னை: மார்ச் மாதத்தில் சுமார் ஒரு லட்சம் இருசக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details