தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 9 am

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 2, 2021, 9:48 AM IST

1. பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் அறிவுரை என்ன?

பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

2. 'நீட்டுக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு' - திமுகவை பலமாக நம்பும் கி. வீரமணி!

நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான பிரச்சினைக்கு திமுக நிச்சயம் நிரந்தரத் தீர்வு கொண்டுவரும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

3. 3ஆவது அலை முன்னெச்சரிகை நடவடிக்கை - குழந்தைகள் நலப்பிரிவு தொடக்கம்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார்.

4. 'எம்ஜிஆருக்கே யோசனை சொல்லிருக்கேன்' - சசிகலாவின் ரீ- என்ட்ரி விரைவில்

கட்சி விஷயமாக எம்ஜிஆர் தன்னிடம் நிறைய கருத்துகளை கேட்டிருக்கிறார் என்று தொண்டர் ஒருவரிடம் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி தொண்டர்களை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.

5. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கிவைத்தார்.

6. ஜவுளிக்கடை, நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை

பட்டுக்கோட்டையில் நகர வணிகர் சங்க பேரமைப்பு தொடக்க நிகழ்வு நேற்று (ஜூலை 1) நடைபெற்றது. அதில் ஜவுளிக்கடை, நகைக்கடை ஆகியவற்றை நேரக்கட்டுப்பாடுடன் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7. வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் பெருக்கெடுத்த வெள்ளம்

கனம‌ழையால் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சியில் ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய‌து.

8. மத்தியப் பிரதேசத்தில் விளையும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்!

'தையோ நோ தம்காவ்' (Taiyo no Tamahav) என்றழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் (japalpuril) விளைவிக்கப்படுகிறது.

9. சீனாவை ஒடுக்க நினைத்தால் தக்க பதிலடி: எச்சரிக்கும் ஜின்பிங்க்!

சீனா யாரையும் ஒடுக்க நினைக்கவில்லை, ஆனால், சீனாவை ஒடுக்க நினைப்பவர்கள் 1.4 பில்லியன் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட சீனப் பெருஞ்சுவரில் மோத வைக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ஜின்பிங்க் தெரிவித்துள்ளார்.

10. படத்தின் டிக்கெட் விற்பனை உரிமை திரையரங்குகளுக்கு கிடையாது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

ஒரு படத்தின் டிக்கெட் விற்பனை உரிமை திரையரங்குகளுக்கு கிடையாது, படத்தின் தயாரிப்பாளரிடம் தான் உள்ளது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details