தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்

9 AM
9 AM

By

Published : Apr 15, 2021, 9:21 AM IST

1. 'தடுப்பூசி சப்ளையில் மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு'

கரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவை எடுத்து தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பாஜக அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பிவைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2. புகழ்பெற்ற பழைய கட்சி ஆட்சி அமைக்குமாம்! - இது 'ஒரு' பஞ்சாங்கத்தின் கணிப்பு

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பழைய கட்சி ஆட்சி அமைக்க நேரும் பஞ்சாங்க கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. அம்பேத்கர் சிலைக்கு மண்டபம் அமைத்துத் தந்த ஊராட்சி மன்றத் தலைவர்!

திருவள்ளூர்: அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரண்வாயல் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி அன்பழகன் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் அம்பேத்கர் சிலைக்கு மண்டபம் அமைத்துத் தந்துள்ளார்.

4. பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டதால் மீன் கடையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு: பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டதால் அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

5. இன்று பெங்களூரு வருகைதரும் ஃபிரான்ஸ் அமைச்சர் லி டிரையன்!

பெங்களூரு: இந்திய, பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் ஃபிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-ஒய்வ்ஸ் லி டிரையன் இன்று (ஏப்ரல் 15) உரையாற்றவுள்ளார்.

6. கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு!

திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் தவறிவிழுந்த 9 வயது சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7. பிரமாண்டமாக வெளியான அருண் விஜய்யின் பார்டர் பட ஃபர்ஸ்ட்லுக்!

அருண் விஜய்யின் 31ஆவது படமான பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு விழா, தனியார் நட்சத்திர விழாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

8. தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்கும் - பிரதமர் மோடி உறுதி

டெல்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதையொட்டி பிரதமர் மோடி நேற்று (ஏப். 14-) மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

9. வங்கி என்பது வெறும் லாபம் ஈட்டும் தொழிலா?

பொதுத் துறை வங்கிகளைக் குறைந்தபட்ச இருப்பாக வைத்திருப்பதற்குப் பதிலாக, பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆரோக்கியமாக இணைந்து செயல்படக்கூடிய திறமையான, உற்பத்தி, லாபம் மற்றும் நம்பகமான வங்கி முறையை உறுதிசெய்வது என்பதே மத்திய அரசுத் தரப்பில் புத்திசாலித்தனமாக இருக்கும் என்கிறார் மிசோரம் பல்கலைக்கழகத்தின் வணிகத் துறை தலைவர் டாக்டர் என்.வி.ஆர். ஜோதி குமார்.

10. தங்க ரதத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன்!

காஞ்சிபுரம்: தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் தங்க ரதத்தில் எழுந்தருளிய காமாட்சியம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details