தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்

9 AM
9 AM

By

Published : Apr 12, 2021, 9:04 AM IST

1.ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா தொற்றாளர் மரணம்: அலட்சியமே காரணம்?

நாகை: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததையடுத்து மருத்துவ ஊழியர்களின் அலட்சியமே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

2. கிராம மக்களைக் கொடூரமாகத் தாக்கிய ம.பி. காவலர்கள்: அதிர்ச்சி காணொலி

போபால்: கண்ட்வா கிராம மக்களை காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. சிறுமி பாலியல் வன்கொடுமை - போக்சோவில் மூவர் கைது

கடலூர்: சிறுமியை மிரட்டி ஆறு மாதமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஐந்து இளைஞர்களில் மூன்று பேரை காவலர்கள் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

4. தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. இன்றுமுதல் திருமலையில் இலவச தரிசனம் ரத்து

கரோனா பரவல் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதைத் தடுக்கும்விதமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

6. நூற்பாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்!

கோயம்புத்தூர்: கருத்தம்பட்டி அருகே வார்ப்பட நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.

7. என் படுக்கையில் நீ எப்படிப் படுக்கலாம்? - மருத்துவமனையில் அரங்கேறிய கொலை

லக்னோ: மருத்துவமனையில் தனது படுக்கையை ஆக்கிரமித்துக் கொண்ட மற்றொரு நபரை, 35 வயதான நபர் ஒருவர், கொடூரமாகத் தாக்கி கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8. ராஜஸ்தானில் இரு சமூகத்தினரிடையே மோதல்: ஊரடங்கு அமல், இணைய சேவை முடக்கம்!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பரண் மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சாப்ரா நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு, இணைய சேவையும் முடக்கப்பட்டது.

9. ஆக்சிஸ் வங்கியிலிருந்து 4 கோடி ரூபாயைத் திருடிய பாதுகாவலருக்கு வலைவீச்சு!

சண்டிகர்: ஆக்சிஸ் வங்கி அலுவலகத்திலிருந்து நான்கு கோடி ரூபாயை அசால்டாக திருடிச்சென்ற பாதுகாவலரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

10. துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார் சூரப்பா!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா இன்று (ஏப்.11) மாலையுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details