தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am - 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 AM
9 AM

By

Published : Feb 13, 2021, 9:10 AM IST

1. பட்ஜெட் விவாதம்; மக்களவையில் நிர்மலா சீதாராமன் இன்று பதிலளிக்கிறார்!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.13) பதிலளிக்கிறார்.

2. ஹரியானாவில் துப்பாக்கிச் சூடு; பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்பட ஐவர் உயிரிழப்பு!

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு மல்யுத்த பயிற்சிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

3. ரயில் மேம்பாலங்கள் முடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

திருவள்ளூர்: ரயில் மேம்பாலங்கள் முடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4. திமுகவுடன் கூட்டணி; சீட்டு ரொம்ப குறைவு தான் - தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ!

திருநெல்வேலி: திமுக தலைமையில் மதிமுக போட்டியிடும் என்றும் கூட்டணியில் சீட் குறைவாக கூட கிடைக்கலாம் அதற்காக வருத்தப்பட கூடாது என்றும் தொண்டர்களுக்கு வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.

5. வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடிய பெண்ணிடம் விசாரணை!

மாங்காட்டில் வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண், திருட்டுத் தொடர்பாக கைரேகை எடுக்கப் போவதாக காவல்துறையினர் கூறியதால் உண்மையை ஒத்துக்கொண்டார்.

6. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது

சென்னை: கோடம்பாக்கம் மேம்பாலம் தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதால் தீப்பிடித்து எரிந்தது.


7. குழந்தை பெற்ற பள்ளி மாணவி: போக்சோவில் கைதான இளைஞர்

தேனி: பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணையில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8. ஷங்கர் படத்தில் நடிக்க இருப்பது உற்சாகமளிக்கிறது - ராம்சரண் ட்வீட்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - தெலுங்கு நடிகர் ராம்சரண் இணைந்து பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அந்தப் படம் மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வேற்று மொழி ஹீரோவை வைத்து ஷங்கர் இயக்கவுள்ளார்.

9. சென்னையில் களமிறங்கும் ஓடிஓ கேப்பிட்டல்ஸ்!

ஓடிஓ கேப்பிட்டல்ஸ் என்னும் ஸ்டார்ட் அப் நிதி நிறுவனம் 30 டீலர்களுடன் இணைந்து சென்னையில் களமிறங்கவுள்ளது.

10. தமிழ்நாட்டில் ரூ.635 கோடிக்கு முதலீடு செய்யும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!

சென்னை: பிரபல மின்சார ஸ்கூட்டர் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, ஓசூரில் உள்ள தனது மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 635 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details