தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv Bharat Top 10 news
ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

By

Published : Nov 19, 2020, 7:08 AM IST

1.சர்வதேச ஆண்கள் தினம் - ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியம்!

பாலின உறவு மேம்பாடு, பாலின சமத்துவம், ஆண் முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவது, ஆண்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியம் (Better health for men and boys) என்ற தலைப்பில் இந்தாண்டு ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

2.'நிலையான சுகாதாரத்திற்கான திறவுகோல் கழிவறைகள்': இந்தியாவின் நிலை என்ன?

நீரும், சுகாதாரமும் மனிதர்களின் அடிப்படை உரிமையாக இருந்தபோதும், கிராமப்புற மக்களுக்கும், வீடற்றவர்களுக்கும் கழிவறை இன்னமும் சிக்கலான நிலையைத்தான் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 'உலக கழிவறை தினம்' (நவ.19) இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

3. 7.5 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 235 இடங்கள் தேர்வு!

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு இடங்களுக்காக நடந்த கலந்தாய்வில், முதல் நாளில் அழைக்கப்பட்ட 262 மாணவர்களில், 235 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

4. மதம் மாறும் பட்டியலினத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத்

பட்டியலினத்தவர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு வேலைக்குச் சேர்ந்த பிறகு மதம் மாறும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

5. பிளாஸ்மா தெரபியை கண்மூடித்தனமாக பயன்படுத்த வேண்டாம் - ஐசிஎம்ஆர்

கரோனா நோயாளிகளின் இறப்பைக் குறைக்காததால், கன்வெலசென்ட் பிளாஸ்மா தெரபியை (சிபிடி) அதிகளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

6. ராமன், லட்சுமணன், சீதையின் ஐம்பொன் சிலைகள் தமிழ்நாடு அலுவலர்களிடம் ஒப்படைப்பு

1978ஆம் ஆண்டு திருடுபோன ராமன், லட்சுமணன், சீதை ஆகிய ஐம்பொன் சிலைகளை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களிடம், மத்திய கலாசார துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஒப்படைத்தார்.

7. உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச்சிவிங்கிக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர்!

கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச்சிவிங்கிக்கு ஜிபிஎஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

8. ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதியில்லை - பாகிஸ்தான்

15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இந்தியாவை உறுப்பு நாடாக இணைப்பதற்கு பாகிஸ்தான் மீண்டும் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.

9.'திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்களுக்கு சிக்கல்கள் இல்லை'

அடுத்தாண்டு மார்ச் மாதம் இறுதி வரை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

10. ஜஸ்டின் லாங்கருக்கு உதவிய டான் பிராட்மேன்...!

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிதவேக பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் ஜஸ்டின் லாங்கருக்கு, ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் கடிதம் வாயிலாக உதவியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details