தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news etv bharat
ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

By

Published : Nov 11, 2020, 7:31 AM IST

'கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேசி வருகிறது' - சுகாதாரத்துறை செயலர்

கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான நிர்வாக குழு உள்நாடு, வெளிநாடுகளில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்!

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தீபாவளிக்கு வெளியாகும் சந்தானத்தின் புதிய திரைப்படம்

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'பிஸ்கோத்' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சோதனைப் போட்டிகள்: ஒலிம்பிக் நிர்வாகம்

2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் சோதனைப் போட்டிகள் நடத்தப்படும் என ஒலிம்பிக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை வெளியேற்ற தாலிபானோடு அல்கொய்தா கூட்டு - புவிசார் அரசியல் போர்

தோகா அமைதி ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்துவதை உறுதி செய்திடவே ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா அமைப்பு மௌனம் காப்பதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் அப்துல் சயீத் தெரிவித்துள்ளார்.

“முதலமைச்சர் பதவி கிடைத்தால் நன்றி கூறுங்கள்”- நிதிஷ் குமாருக்கு சிவசேனா வாழ்த்து!

ஐக்கிய ஜனதா தளம் குறைவான தொகுதிகளை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் பதவி கிடைத்தால், சிவசேனாவுக்கு நன்றி கூறுங்கள் என நிதிஷ் குமாருக்கு சிவசேனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

“நிதிஷ் குமாரை மக்கள் விரும்புகின்றனர்”- ஜேடியூ தலைவர் வசிஷ்டா சிங்

பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று (நவ10) எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இந்நிலையில் 6 மணிக்குள் ஒரு கோடி வாக்குப்பெட்டிகள் எண்ணி முடிக்கப்பட்டன.

விர்ச்சுவல் காப் : பொதுமக்களுடன் உறவை மேம்படுத்த காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி!

பொதுமக்களுடனான உறவை மேம்படுத்த புதிய "விர்ச்சுவல் காப்" என்ற குறுஞ்செயலி காவல்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மந்த நிலையில் பலகார விற்பனை - வியாபாரிகள் வேதனை

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இனிப்பு உள்ளிட்ட பலகார விற்பனை மந்த நிலையில் நடைபெறுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாரம்பரிய, பள்ளிப்பருவ தின்பண்டங்களை கண்முன் நிறுத்தும் தமிழ் ஆர்வலர்!

நாகரிக வாழ்வில் பயணித்துவருபவர்களும் கமர்கட்டு, இலந்தை அடை, பொரி உருண்டையைச் சுவைக்க மறந்திருக்கமாட்டார்கள். அப்படி பாரம்பரிய, பள்ளிப்பருவ தின்பண்டங்களை கண்முன் நிறுத்தி விற்பனை செய்து வரும் தமிழ் ஆர்வலர் பற்றி அறிய மயிலாடுதுறை வரை செல்வோமா...

ABOUT THE AUTHOR

...view details