தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM - சென்னை செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM

By

Published : Nov 2, 2021, 7:22 PM IST

1.அம்மாடியோவ்... உலகமெங்கும் இத்தனை திரையரங்கில் வெளியாகும் 'அண்ணாத்த'!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2.பென்னிகுயிக் வாழ்க்கை சரிதத்தைப் படமாக்க விரும்பும் இயக்குநர் சீனு ராமசாமி

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் வாழ்க்கை சரிதத்தைப் படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

3.தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு

சென்னை - திருமங்கலத்தில் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

4.கோடநாடு கொலை வழக்கு - ரமேஷை கூடுதலாக 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைதான ரமேஷை கூடுதலாக 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க உதகை மகளிர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

5.வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயார் - சென்னை மாநகராட்சி

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் தயாராக உள்ளது.

6.நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வெளியானது ஆரஞ்சு எச்சரிக்கை

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு, இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

7.பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட பார்வையற்றவருக்கு உதவிய முதியவர்!

பணமதிப்பிழப்பு நோட்டுகள் வைத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலமாக சென்னையைச் சோ்ந்த நபா் ரூ.65 ஆயிரம் மாற்று பணம் கொடுத்து உதவி செய்தார்.

8.பட்டாசு கடைக்குச் சீல் வைப்பு - அதனை அகற்றக்கோரிய வழக்கு விசாரணை

விழுப்புரத்தில் சீல் வைத்த பட்டாசு கடையை, மீண்டும் திறக்கக்கோரி பட்டாசுக்கடை உரிமையாளர் நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

9.அரசுப் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்கத் தொகை - தமிழ்நாடு அரசு

அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

10.துணை முதலமைச்சர் அஜித் பவாரின் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு சொந்தமான தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details