தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM - 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

7 PM
7 PM

By

Published : Mar 31, 2021, 6:55 PM IST

Updated : Mar 31, 2021, 7:49 PM IST

1. இடஒதுக்கீடு என்ற பெயரில் இபிஎஸ்-ஓபிஎஸ் நாடகம் - மு.க. ஸ்டாலின்

தேனி: இடஒதுக்கீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்ற பழனிசாமியுடன் சேர்ந்து நாடகமாடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என போடிநாயக்கனூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2. இழிவாகப் பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்பு

சென்னை: காலங்காலமாக பெண்களை இழிவாகப் பேசுவதே திமுகவின் கொள்கை என ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

3. அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு முன்பிணை!

மதுரை: செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு முன்பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4. நெல்லையில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்: தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

திருநெல்வேலி: 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல்செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கைத் தாக்கல்செய்துள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

5. திராவிட ஆட்சியே பிரச்சினைதான் - நாதக வேட்பாளர் சத்யா

குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ஆயிரத்து 500 ரூபாய் தருகிறோம் என திராவிட கட்சிகள் போட்டிபோட்டு அறிவிக்கின்றன. ஆனால், நான் செல்லும் இடங்களில் எல்லா பெண்களும் என்னிடம் பணமெல்லாம் வேண்டாம், முதலில் சாராயக் கடையை மூடுங்கள் என்கிறார்கள்.

6. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா மோடி? - டி.ராஜா

திருப்பூர்: பெண்களின் மீது அக்கறை உள்ளதாக பாசாங்கு செய்யும் மோடி பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவாரா என திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்

7. 'கர்ணன்' பட இசை வெளியீடு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

8. தந்தைக்காக மகன் ஒரு சவாலை ஏற்கிறான்; அவன்தான் 'சுல்தான்' - நடிகர் கார்த்தி

சென்னை: தந்தை கூறிய வாக்கை காப்பற்றும் மகன் சந்திக்கும் சவாலே 'சுல்தான்' என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

9. இடதுசாரிகள் சில தங்க துண்டுகளுக்காக, கேரள மக்களின் முதுகில் குத்துகிறார்கள்- வி முரளிதரன்

கொச்சி: கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியினர் இடையே இரகசிய புனிதமற்ற உறவு இருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் வி. முரளிதரன் விமர்சித்துள்ளார்.

10. பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு 10 ஆண்டு சிறை!

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பகதூர் அலிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Last Updated : Mar 31, 2021, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details