தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்Top 10 News @ 7 PM - Top 10 News @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

7 PM
7 PM

By

Published : Mar 30, 2021, 7:01 PM IST

1. ’இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜகவை தோளில் சுமக்கும் ராமதாஸ்’ - திருமாவளவன்

மயிலாடுதுறை: மண்டல் கமிஷனில் ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீடு பரிந்துரையை எதிர்த்த பாஜகவை தற்போது பாமக தோளில் தூக்கி சுமப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2. கையில் துவைத்து கஷ்டப்பட வேண்டாம் மச்சான்ஸ், வாஷிங் மிஷின் ஃப்ரீ : நடிகை நமீதா

அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டங்கள் தொடர ஆதரவு அளிக்குமாறு நடிகை நமீதா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு நடிகை சுஹாசினி கொடுத்த பதிலடியை கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.

3. அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி!

நந்திகிராமில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவரது காலில் விழுந்த தொண்டர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பிவைத்தார். ஆனால், அதற்கு நேர் எதிராக பிரதமர் மோடி நடந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய காலில் விழ வந்தவரின் காலில் விழுந்து அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இனி காலில் விழும் பழக்கத்தைத் தவிர்க்குமாறும் அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார்.

4. அதிமுக அரசில் பாஜக அங்கம் வகிக்கும்! - வி.கே.சிங் திட்டவட்டம்!

விருதுநகர்: அடுத்து அமையப்போகும் அதிமுக அரசில் பாஜக நிச்சயம் அங்கம் வகிக்கும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

5. அடுக்கு மொழியெல்லாம் இல்லை ஆபாச மொழிதான் - பரப்புரைக்கு நேர்ந்த பரிதாபம்

ஆ. ராசா பேசியதற்கு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கினாரா, இல்லை அரசியலுக்காக கலங்கினாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசுவது எவ்வளவு தவறோ, கண்ணியக்குறைவோ, அதற்கு ஈடானது அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதும்.

6. படித்தவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள்- செந்தில் பாலாஜி

கரூர்: படித்தவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், திமுக ஆட்சியில் நிச்சயம் அரசு வேலை வழங்கப்படும் என கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

7. மதுரை நீர்நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீர்ப் பஞ்சத்திற்கு வித்திடுகிறதா அரசு?

மதுரை நீர்நிலைகளை ஆக்கிரமித்து தண்ணீர்ப் பஞ்சத்திற்கு வித்திடுகிறதா அரசு என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

8. ரோபோட் வரைந்த டிஜிட்டல் ஆர்ட் ரூ.5 கோடிக்கு விற்பனை!

பெய்ஜிங்: ஹூமானாய்டு ரோபோ சோபியா வரைந்த டிஜிட்டல் ஆர்ட், இணையத்தில் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனையாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

9. பிளேஸ்டேஷன் 3 சாதனத்தை நிறுத்தப்போகிறதா சோனி - அதிர்ச்சியில் கேமர்ஸ்

சான் பிரான்ஸ்சிகோ: உலகளவில் 80 மில்லியனுக்கும் (எட்டு கோடி) அதிகமான யூனிட்கள் விற்பனையான பிளேஸ்டேஷன் 3 சாதனத்தின் வெளியீட்டை நிறுத்த சோனி நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

10. ஐபிஎல்2021: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய ஹர்பஜன் சிங்!

இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜட்டின் சப்ரூவுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details