தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 News @ 7 PM - 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

7 PM
7 PM

By

Published : Mar 29, 2021, 7:16 PM IST

1. சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கு 4 ஆண்டுகள் சிறை!

சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. அதிமுக வளர்மதியை தகுதி நீக்கம்செய்ய சத்யபிரத சாகுவிடம் மநீம வேட்பாளர் புகார்

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 29) மக்கள் நீதி மய்யத்தின் ஆலந்தூர் வேட்பாளர் சரத்பாபு, அத்தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்வதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்தார்.

3. எடப்பாடி தலைமையிலான ஆட்சி சுயமாகச் சிந்திக்கக்கூடியது அல்ல - பிரகாஷ் காரத்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆட்சி சுயமாகச் சிந்திக்கக்கூடியது அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் விமர்சித்துள்ளார்.

4. சிறப்பு டிஜிபிக்கு எதிராகப் போராடிய 27 பேர் மீதான வழக்குகள் ரத்து!

மதுரை: சிறப்பு டிஜிபிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

5. '15 லட்சமா... 15 காசுகள்கூட போடாதவர் மோடி' - உதயநிதி

15 லட்சம் போடுவதாகச் சொன்ன பிரதமர் மோடி 15 காசுகள்கூட போடவில்லை என நாமக்கல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

6. மாணவனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்த போதை ஆசாமி: பக்கோடா ஸ்டாலில் கொலை!

அமராவதி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், பள்ளி மாணவனை இரும்புக் கம்பியால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. நடிகை ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை!

சென்னை: நடிகையும் ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

8. 'ரஜினியுடன் ஒப்பிடாதீர்!' - ஆன்மிக அரசியலைக் கையிலெடுத்த டி.ஆர்.!

சென்னை: இலட்சிய திமுகவின் லட்சியப் பயணம் தொடரும். இனி ஆன்மிக அரசியலை தான் கையில் எடுக்கப்போவதாக இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

9. இந்தோனேசியா எண்ணெய் சுத்திரிகரிப்பு ஆலையில் தீ விபத்து

ஜகர்தா: எண்ணெய் சுத்திரிகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

10. உலக பொருளாதாரத்தை மீண்டும் மிதக்கவைத்த 'எவர்கிவன்'!

கடந்த ஆறு நாள்களாக உலக பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்கவைத்த எவர்கிவன் கப்பல், சூயஸ் கால்வாயில் சிக்கியது எப்படி, அதன் பொருளாதார முக்கியத்துவம் என்ன, அது எப்படி மீட்கப்பட்டது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு.

ABOUT THE AUTHOR

...view details