தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம்TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

காலை 7 மணி செய்தி
காலை 7 மணி செய்தி

By

Published : Apr 15, 2021, 7:14 AM IST

1. அம்பேத்கர் சிலைக்கு மண்டபம் அமைத்துத் தந்த ஊராட்சி மன்றத் தலைவர்!

திருவள்ளூர்: அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரண்வாயல் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி அன்பழகன் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் அம்பேத்கர் சிலைக்கு மண்டபம் அமைத்துத் தந்துள்ளார்.

2. தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களுக்குப் படையெடுத்த பக்தர்கள்!

சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களில் சாமி தரிசனம்செய்தனர்

3.வேளச்சேரி மறு வாக்குப்பதிவின்போது 548 ஆண் வாக்காளர்களுக்கு மட்டுமே அனுமதி!

சென்னை: வேளச்சேரி மறு வாக்குப்பதிவின்போது 548 ஆண் வாக்காளர்கள் மட்டுமே அனுமதி என மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

4. தூய்மை இந்தியாவின் முன்மாதிரி கிராமம்!

அழகிய ஆப்பிள்கள், வெண்பனி மலைகள் என இயற்கை எழில் கொஞ்சும் இமாச்சலப் பிரதேசம், தூய்மைப் பணிகளிலும் கவனம் செலுத்தும் ஒரு மாநிலமாகும். இங்குள்ள ரக்சாம் என்றழைக்கப்படும் கிராமம் தூய்மை இந்தியா திட்டத்தின் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

5.சொந்த மகன்களை வேலைக்காரர்களாக நடத்திய தாய் மீது நடவடிக்கை எடுக்க புகார்!

தான் பெற்ற பிள்ளைகளை வேறொரு பெண்ணுடன் இணைந்துகொண்டு கொடுமைப்படுத்தும் தனது மகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

6. சொந்த மகன்களை வேலைக்காரர்களாக நடத்திய தாய் மீது நடவடிக்கை எடுக்க புகார்!

தான் பெற்ற பிள்ளைகளை வேறொரு பெண்ணுடன் இணைந்துகொண்டு கொடுமைப்படுத்தும் தனது மகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.


7. ராட்சத கிரேன் வாகனத்தில் திடீர் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சேலம்: வாழப்பாடி அருகே 14 சக்கரங்கள் கொண்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ராட்சத கிரேன் வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

8. மினி லாரியில் கடத்த முயன்ற 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

மயிலாடுதுறை: மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ஆயிரத்து 50 லிட்டர் சாராயம் கடத்த முயற்சித்த ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்து மினி லாரியையும், சாராயத்தையும் பறிமுதல்செய்துள்ளனர்.

9. ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகனம் திருட்டு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிசிவிடி காட்சியின் உதவியுடன் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


10. IPL 2021 SRH vs RCB: சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ABOUT THE AUTHOR

...view details