தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7 AM
7 AM

By

Published : Apr 13, 2021, 7:28 AM IST

1. என்னவானது மழைநீர் சேமிப்புத் திட்டம்?

சென்னை: கடந்த காலங்களில் சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. அதனைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு...

2. சார்ஜாவுக்கு கடத்த முயன்ற 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் வழியாக சார்ஜாவுக்கு கடத்தமுயன்ற ரூ.10 லட்சம் மதிப்புடைய 3 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

3.பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் இன்று டெல்லி வருகை!

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் மூன்று நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.13) இந்தியா வருகிறார்.

4. 'கடந்த 7 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரிப்பு!'

உலகளவில் கரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், கடந்த ஏழு வாரங்களாக மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

5. சூர்யாவை இயக்கும் மாரி செல்வராஜ்?

நடிகர் சூர்யா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

6. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர்

சென்னை: பொதுமக்கள் அனைவரும் தவறாமல் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7. உகாதி பண்டிகை; மேஷத்தில் சூரியன் அமர்வதால் உண்டாகும் பொதுப்பலன்கள்

உகாதி பண்டிகை நன்நாளில் மேஷத்தில் சூரியன் அமர்வதால் உண்டாகும் பொதுப்பலன்கள் குறித்து பார்க்கலாம்.

8. கோவிட் தடுப்பூசி; அனைத்து மாநில ஆளுநர்களுடன் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நாளை ஆலோசனை!

கோவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் புதன்கிழமை (ஏப்.14) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர்.

9. ஒன் மேன் ஷோ காட்டிய சாம்சன்.. கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வாண வேடிக்கை நிகழ்த்தி சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வானார். அவர் 63 பந்துகளில் 119 ரன்கள் (188.89 ஸ்டிரைக் ரேட்) குவித்தார். இதில், 7 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்!

10. அபுஜ்மத் மாய புல்லாங்குழல்!

மாய இசை வழங்கும் அபுஜ்மத் புல்லாங்குழல் வாய் மூலமாக இசைக்கப்படுவதில்லை. காற்றின் திசையில் சூழன்று அதற்கேற்றவாறு இசையை ஒலிக்கவைக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details