தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 AM
7 AM

By

Published : Apr 12, 2021, 7:04 AM IST

1. கரோனா குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை: வருகிறது கடுமையான கட்டுப்பாடுகள்?

சென்னை: கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

2. குளத்தில் மூழ்கி மாணவன் மரணம்: திருமுல்லைவாயிலில் சோகம்

சென்னை: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் பத்தாம் வகுப்பு மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3. கரோனா: கனிக்கானும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி: கரோனா தொற்று தொடர்பாக அரசின் புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வழக்கமாக நடக்கும் கனிக்கானும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் பீடி நிறுவன ஊழியர் உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் பீடி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

5. ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் வீட்டில் திருட்டு!

ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் வீட்டில் இருந்த 46 பவுன் நகைகள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

6. கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி நீங்கலாக பிற மாநிலங்களிலிருந்து வந்தால் இ-பாஸ் கட்டாயம்!

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறினார்.

7. 'சீனா, பாகிஸ்தான், கிறிஸ்தவ நாடுகளின் சதியால் தமிழ்நாட்டில் கலவரம்!'

கோவை: சீனா, பாகிஸ்தான், கிறிஸ்தவ நாடுகளின் சதியால் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

8. கரோனாவிலிருந்து மீண்ட மாதவன்!

சென்னை: நடிகர் மாதவன் தான் கரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

9. SRH vs KKR IPL 2021; 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் தோல்வி!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் தோல்வியைத் தழுவியது.

10. மத்திய அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ராகேஷ் டிக்கைட்

டெல்லி: மத்திய அரசு அழைத்தால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details