தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 AM
7 AM

By

Published : Apr 10, 2021, 7:11 AM IST

1. கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை

சென்னை: கரோனா தொற்றின் தாக்கம் வலுவடைந்துவருவதால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் (ஏப்ரல் 10) அவை நடைமுறைக்கு வருகின்றன.

2.தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 87 ஆயிரத்து, 36 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

3. தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டிய நேரம் இது

எல்லோருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படுவதை இன்னும் துரிதப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு விரிவான மருந்து உற்பத்தி தொடர வேண்டும்; விரிவான அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும். அரசுகள் ஒன்றிணைந்து அர்த்தத்துடன் செயல்பட்டால் மட்டுமே தேசம் கோவிட்-19 என்னும் அரக்கனை வீழ்த்தி வெற்றி காண முடியும்.

4. ஆட்சி மாற்றம் வாக்கு விகிதத்தில் இல்லை, அது வாக்காளர்களின் அரசியல் தேர்வில் இருக்கிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் நிகழ்ந்திருக்கும் அதிகமான வாக்குப்பதிவு தேர்தல் ஆய்வாளர்களின் மத்தியிலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் ஏராளமான ஊகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.

5. ஆய்வு மாணவருக்கு கரோனா தொற்று: காமராஜர் பல்கலை. துறை மூடல்!

மதுரை காமராஜர் பல்கலை., உயிரி தொழில்நுட்பத் துறையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்தத் துறையை மூட பல்கலை., துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

6. தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்து - ரூ.20 கோடி மதிப்புள்ள பொருள்கள் நாசம்!

தூத்துக்குடி: சிப்காட் பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.20 கோடி மதிப்புள்ள துணிமணிகள், காகித பண்டல்கள் எரிந்து நாசமாகின.

7. முகக்கவசம் அணிவது கட்டாயம்- தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஏப்.9) நடைபெற்றது.

8. கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9. IPL 2021: வெற்றிக்கணக்குடன் தொடங்கியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்!

சென்னையில் இன்று (ஏப்.9) தேதி நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் நடப்பு சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன் வெற்றிக் கணக்கை தொடங்கியது.

10. மனோகரா வாஸ்ட்ராட் வீடு: இந்த வீட்டிற்கு வயது 200.

எலிவளையானாலும் தனிவளையாக வேண்டும் என்றொரு சொலவடையுண்டு. எல்லோருக்கும் ஒரு வீடு கட்டிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவில் பல தசாப்தங்களைக் கழிக்கும் கூட்டங்களே நம்மில் அதிகம். கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தின் ஷிரோலா கிராமத்தில் உள்ள மனோகரா வாஸ்ட்ராட் வீடு கொஞ்சம் வித்தியாசமானது. 200 விட்டங்களும் 20 அறைகள், 15க்கும் மேற்பட்ட கதவுகள், 20 நெடுவரிசைகள் கொண்ட இந்த வீட்டின் வயது கிட்டத்தட்ட 200.

ABOUT THE AUTHOR

...view details