தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 AM
7 AM

By

Published : Apr 9, 2021, 7:02 AM IST

1. 'வெற்றி விழாவுக்குத் தயாராக இருங்கள்’ - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் : சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

2. முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் - பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

பெட்ரோல் நிரப்ப வருபவர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

3. கரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமருடன் தமிழ்நாடு தலைமை செயலாளர் ஆலோசனை!

கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடியுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.

4. 14ஆவது ஐபிஎல் தொடர்: ஹாட்ரிக் முனைப்பில் மும்பை; முதல் கோப்பைக்கான ஆர்வத்தில் ஆர்சிபி!

ஐந்து மாத இடைவெளியில் இரண்டு ஐபிஎல் தொடர்கள் நடப்பது என்பது அணியினருக்கு கடினம் தான் என்றாலும், கரோனா பொது முடக்க அச்சத்தில் கலங்கியிருக்கும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் வரும் ஏழு வாரமும் ஐபிஎல் தான் பெரும் விருந்தாய் அமையப் போகிறது.

5. கோயம்பேட்டில் சில்லரை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!

கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லைரை விற்பனைக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

6. புற்றுநோயாளிகளின் வலிபோக்கும் தலைமுடி தானம்!

மாறிவரும் சுற்றுச்சூழல், சுகாதாரமற்ற உணவு, வாழ்க்கை முறையில் மாற்றம், மரபணு கோளாறு என பல்வேறு காரணங்களால் அனைத்து வயதினருக்கும் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையின்போது, ஏற்படும் பக்க விளைவுகளில் முக்கியமான ஒன்று தலைமுடி உதிர்த்தல். இதனால் புற்றுநோயாளிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ராஜஸ்தானில் உள்ள தன்னார்வ அமைப்பு, பொதுமக்களிடம் இருந்து தலைமுடிகளை தானமாக பெற்று, அதனை புற்று நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

7. வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' - சில மணி நேரங்களில் தீப்பிடித்ததுபோல் தீவிர வரவேற்பு!

கவிஞர் வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் பாடல் வெளியிட்டுள்ளார். இது வெளியான சில மணி நேரங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

8. ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்டனர்.

9. இரண்டாவது முறை கோப்பை வெல்லுமா ஹைதராபாத்?

நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2021 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம், பலவீனத்தை இங்கு காண்போம்.

10. IPL 2021: டிசிசிஐ நிர்வாகிகளை தொடக்கப் போட்டிக்கு அழைத்த பிசிசிஐ செயலாளர்

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தை (டிசிசிஐ) நாளை (ஏப்.9) நடைபெறவிருக்கும் தொடக்க போட்டியில் பங்கெடுக்குமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details