தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 AM
7 AM

By

Published : Apr 5, 2021, 7:16 AM IST

1. புதுச்சேரியில் ஏன் 144 தடை உத்தரவு... தெளிவுபடுத்தாவிட்டால் ரத்து - நீதிமன்றம் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என தெளிவுபடுத்தாவிட்டால் அது ரத்துசெய்யப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

2. 'குக்கூ' குடும்ப உறுப்பினரான ஒரு பறவையின் கதை

மும்பையில் வாழ்ந்துவரும் கிரேஷ் என்பவர் தன் குடும்பத்தில் காகம் ஒன்றை வளர்த்துவருகிறது. அதற்கு குக்கூ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் காகம் அந்தக் குடும்பத்தினர் என்ன சொன்னாலும் கேட்குமாம். இந்தக் காகம் குறித்த ஓர் ஆர்வமான, மனிதாபிமானமிக்க கதை இங்கு காணலாம்.

3. பணம் பட்டுவாடா செய்த 5 நபர்கள் கைது!

ஈரோடு: வளையக்கார வீதியில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினர் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

4. 22 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மணல் சிற்பத்தில் அஞ்சலி

பூரி (ஒடிசா): சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்குப் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம்செய்து அஞ்சலி செலுத்தினார்.

5. வாக்குக்கு கொடுக்க வைத்திருந்த பணம்: ரூ 27,430 பணம் பறிமுதல்

பெரம்பலூர்: நெய்க் குப்பை கிராமத்தில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 2 பேரிடமிருந்து ரூ.27,430 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

6. ராஜஸ்தானில் போதை மாத்திரைகள் கடத்தியவர் கைது!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போதை மாத்திரைகள் கடத்தியவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

7. விலங்குகளின் காப்பாளனாக அவதாரம் எடுக்கும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, விலங்குகளுக்கான காப்பகத்தை தொடங்கவுள்ளார்.

8. இரண்டாம் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 193 ரன்கள் அடித்தும், தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9. ஈரோட்டில் பரவலான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஈரோடு: ஈரோடு சோலார், லக்காபுரம், முத்துகவுண்டன் பாளையம், மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

10. போலாந்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் வெளியேற்றம்!

வார்சா: போலாந்தின் மிகப்பெரிய விமான நிலையமான வார்சா சோபின் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details