தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7 AM
7 AM

By

Published : Apr 2, 2021, 7:18 AM IST

1. கரோனா தடுப்பூசி செலுத்திக்கோங்க - ஆளுநர் வேண்டுகோள்

அரசு அறிவித்துள்ள வயது வரம்பின் அடிப்படையில் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை ட்வீட் செய்துள்ளார்.

2. புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் எளாவூர் – கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3. பாஜக பேரணியில் கல்வீசப்பட்ட கடையில் காலணி வாங்கிய கமல்!

கோயம்புத்தூர்: பாஜக பேரணியில் கற்களைக் கொண்டு தாக்கிய காலணி கடையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் காலணி வாங்கினார்.

4. மெட்ரோ தண்ணீருக்கு ஆன்லைன் பதிவு மும்முரம்!

சென்னை: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகள் ஆன்லைனில் மெட்ரோ தண்ணீரை முன் பணம் செலுத்தி பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

5. எஸ்.பி. சண்முகநாதனின் வேட்புமனுவை ரத்துசெய்ய முடியாது - நீதிமன்றம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை ரத்துசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

6. ஆட்டோ மீது கார் மோதி விபத்து: மாணவிகள் உள்பட மூவருக்கு காயம்

சென்னை: ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 மாணவிகள் உள்பட மூவருக்கு காயம் ஏற்பட்டது.

7. ஓடிடி தளத்தில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகும் 'சூரரைப் போற்று'

சென்னை: சூர்யா நடிப்பில் உருவான 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு 'உடான்' என்ற பெயரில் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

8. மத்திய ரிசர்வ் படை மீது திருணமூல் காங்கிரஸ் புகார்

நந்திகிராம் தொகுதி பெண் வாக்களர்களிடம் மத்திய ரிசர்வ் படையினர் தவறாக நடந்துகொண்டதாகத் திருணமூல் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

9. பாஜகவினர் விஷம் போன்றவர்கள் : மல்லிகார்ஜுன கார்கே சீற்றம்

பாஜகவினர் விஷம் போன்றவர்கள் அவர்களை புதுச்சேரியில் ஆட்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

10. சந்திராபூர் பிளாகரின் வெற்றி கதை!

நாள்தோறும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வேலைக்காகச் சுற்றிச் சுழல்வதற்குப் பதில், தனித்துவமாக ஏதாவது செய்ய விரும்பியவர் ஒடிசாவின் சந்திராபூரைச் சேர்ந்த சந்தன் பிரசாத் சாஹு.

ABOUT THE AUTHOR

...view details