தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 News @ 7 AM - 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 AM
7 AM

By

Published : Apr 1, 2021, 6:51 AM IST

1. மர்மங்கள் நிறைந்த நந்திகிராம்: மேற்கு வங்கத்தின் போர்க்களம்

நந்திகிராம் விவகாரத்தில் இடதுசாரிகளுக்குத் தொடர்பில்லை என்று சொல்வதன் வாயிலாகத் தமக்கு வாக்குகள் கிடைக்கும் என்று மம்தா நினைக்கலாம் என ஈடிவி பாரத் செய்தி ஒருங்கிணைப்பாளர் தீபங்கர் போஸ் தெரிவிக்கிறார்.

2. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்புவைத்து விற்க ஏற்பாடு!

சென்னை: தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்புவைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3. ரயில்வே பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து

நாகர்கோவில் டெய்லி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயிலானது, ரயில் பணிகள் காரணமாக மதுரை - நாகர்கோயில் இடையே ரத்துசெய்யப்பட்டது. அதேபோல், சென்னை - எழும்பூர் இடையிலான தூத்துக்குடி தினசரி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் மாலை 7.35 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டது.

4. என்.ஆர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

அனைத்துக் குடும்பங்களுக்கும் ஐந்து லட்சம் வரையில் மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என என்.ஆர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதில் உள்ள அம்சங்கள் குறித்து காணலாம்.

5. 'திமுகவினர் சமூகத்திற்கு எதிரானவர்கள்!'

திமுகவினர் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்பி சையத் ஜாபர் தெரிவித்துள்ளார்.

6. கடலில் விடப்பட்ட 150 ஆமைக் குஞ்சுகள்

விழுப்புரம்: கடலில் 150 ஆமைக் குஞ்சுகள் விடப்பட்டன.

7. ராமநாதபுரம் அருகே இளைஞர் கொலை: நீதிமன்றத்தில் ஐவர் சரண்

ராமநாதபுரம்: இளைஞரை கொலை செய்துவிட்டு திருப்புவனம் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர்.

8. ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஜேசன் ராய்

ஹைதராபாத் அணி ஜேசன் ராயை அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

9. மக்களின் சேமிப்புத் திறனை முடக்கும் அரசு - தொடர்ந்து குறைக்கப்படும் வட்டி!

மும்பை: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 1) முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தைக் குறைத்து அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

10. சுக்தி நதியால் மீண்டும் உயிர்ப்பெற்ற 11 கிராமங்கள்!

இந்தூரில் சிம்ரோல் பிராந்தியக் காடுகளைச் சுற்றியுள்ள 11 கிராமங்கள் எழுச்சிப்பெற்ற கதைதான் இது. நூற்றுக்கணக்கான மக்கள் நீருக்காகப் போராடிவந்தனர். வேளாண் நிலம் தரிசாக ஆரம்பித்தது. கால்நடைகள் உணவுக்காகவும், நீருக்காகவும் கிராமங்களைச் சுற்றிவந்தன. பலரும் வேலைதேடி கிராமங்களை விட்டுப் புறப்படத் தொடங்கினர். கடினமான சூழ்நிலையைச் சந்தித்துவந்த கிராமவாசிகளுக்கு, எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது.

ABOUT THE AUTHOR

...view details