தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 AM
7 AM

By

Published : Feb 5, 2021, 7:14 AM IST

  1. சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம்: பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவர்கள்

கடலூர்: கல்லூரி கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், அக்கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

2. ஸ்டாலின் பரப்புரைக் கூட்டம்: பந்திக்கு முந்தி திமுகவினர் சச்சரவு!

ராமநாதபுரம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் சாப்பாடு வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

3. ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக கட்சிக்கு வேறுபாடு இல்லை - திருமாவளவன்

எழுவர் விடுதலையை மீண்டும் நிராகரித்த ஆளுநர் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்; ஈழ தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கு ஒரே நிலைபாடு தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

4. 11 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் 11 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

5. பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!

வேலூர்: அரப்பாக்கத்தில் பள்ளி மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

6. காதலித்த பெண்ணை நிச்சயம் செய்யும் வேளையில் தவறிய காவலரின் மனம்!

ஏலகிரி மலையில் இறந்த நிலையில் காவலர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாகக் காதலித்த பெண்ணை பிப்ரவரி 8ஆம் தேதி நிச்சயம் செய்யும் நிகழ்வை வைத்துவிட்டு, காவலர் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

7. போதையிலிருந்து மீள வா என்றழைத்து இளைஞரை சடலமாக அனுப்பிய சோகம்!

போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார். மரணம் குறித்து விசாரிக்க உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8. டாப்ஸியை இரண்டாம் தர நபர் என விமர்சித்த கங்கனா

டாப்ஸியை இரண்டாம் தர நபர், மற்றவர்களின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்துபவர் என நடிகை கங்கனா தனது ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

9. பிரம்மோஸ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய தயார் - தலைமை செயல் அலுவலர்

பெங்களூரு: பிரம்மோஸ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கான திறன் நிறுவனத்திற்கு உள்ளதாகவும் பிரம்மோஸ் தலைமை செயல் அலுவலர் சுதீர் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

10. விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்கா கருத்து: வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு!

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் குறித்த அமெரிக்காவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details