தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 4, 2021, 5:15 PM IST

1.பேட்மிண்டனில் இந்தியாவுக்கு இன்று இரட்டைப் பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் தங்கப் பதக்கமும், மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

2.கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

3.தங்கம் வென்ற மணிஷ்... ரூ.6 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற மணிஷ் நார்வாலுக்கு, 6 கோடி ரூபாய் பரிசுத் தொகையை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

4.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு காணொலிகளையும் வெளியிட கோரிக்கை

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் காணொலிகளையும் ஊடகங்களுக்கு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

5.தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6.திருக்கோயில் பாதுகாப்பு படையினரின் மாத தொகுப்பூதியம் ரூ. 5 ஆயிரம் உயர்வு!

திருக்கோவில் பாதுகாப்பு படையினரின் மாத தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

7.'குழந்தை போல எஸ்.பி.ஜனநாதன் நான் சொன்னதைக் கேட்டார்' - இமான்

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'லாபம்'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (செப்.03) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் டி.இமான் கலந்துகொண்டு எஸ்.பி.ஜனநாதன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

8.கோடிக்கணக்கில் ஆப்பிள்கள் வாங்கி ஏமாற்றிய வியாபாரி கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஆப்பிள் பழங்களை வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய, சென்னை பழ வியாபாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

9.பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து!

தொழில்முனைவோர், நெசவாளர்களின் கோரிக்கையான பஞ்சு மீதான 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி ரத்துசெய்யப்படும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

10.’தமிழ்நாட்டில் 6 இடங்களில் சைவ, வைணவ அர்ச்சகர் பயிற்சி மையங்கள்’ - இந்து சமய அறநிலையத்துறை

மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி இடங்களும் ஏற்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details