தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம் - Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jun 30, 2021, 4:53 PM IST

1. கோவிட் நோயாளிகளுக்கு இழப்பீடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நிதிச்சுமை காரணமாக ரூ.4 லட்சம் இழப்பீடு செலுத்த முடியாது எனக் கூறியிருந்தது.

சென்னையில் நடக்கும் பிரிவு உபசார நிகழ்வு

2. சென்னையில் நடக்கும் பிரிவு உபசார நிகழ்வு

ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதிக்கு சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் பிரிவு உபசார விழா நிகழ்வு.

3. 'தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை' - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர், ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

4. புதிய மின்திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ. 3 லட்சம் கோடியில் புதிய மின்திட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5. பெரும் விலைக்கு வாங்கிய அமேசான் பிரைம்... ஓடிடியில் ரிலீஸாகும் ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’!

திரையரங்கில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

6. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி அரசு ஜூலை 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை, பூங்கா இரவு 9 மணிவரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

7. ஜம்மு காஷ்மீரை வட்டமிட்ட ட்ரோன்கள்- பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு!

ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு இடங்களில் இன்று (புதன்கிழமை) ட்ரோன்கள் வட்டமடித்தன. இதனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

8. மிதாலி, அஸ்வின் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை; அர்ஜுனா பட்டியலில் தவான்

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

9. 'தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழ்ப் பெருமக்கள்!'

தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும் எனக் கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

10. இந்தியன் 2 பட விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிப்பு

இந்தியன் 2 படப் பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கர் - லைக்கா நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதியை நடுவராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details