தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2020, 12:57 PM IST

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

மின் கட்டணம் உயர்வு - கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூட்டத்தை தவிர்க்க காசிமேடு துறைமுகத்தில் கட்டுப்பாடு - மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை: காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் குறைந்துவரும் கரோனா தொற்று பாதிப்பு!

சென்னை : 15 மண்டலங்களிலும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,000க்கும் கீழ் உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆண்டாள் கோயிலில் பக்தர்களின்றி நடந்த ஐந்து கருட சேவை நிகழ்ச்சி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிபூர திருவிழாவையொட்டி ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

விதை வெங்காயத்துக்கு தட்டுப்பாடு: பெரம்பலூர் விவசாயிகள் கவலை!

பெரம்பலூர்: மாவட்டத்தில் சாகுபடிக்கு விதை வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம்: ஐந்து பேர் கைது!

உத்தரப் பிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

'மோதல் போக்கை கைவிட்டு மக்கள் பணியாற்றுங்கள்' - மம்தாவைச் சாடும் ஆளுநர்

கொல்கத்தா: மத்திய அரசிடம் மோதல் போக்கைக் கைவிட்டுவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

'100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடியை இழந்த சில்லறை வர்த்தகம்'

டெல்லி: கரோனா தொற்றின் காரணமாக சில்லறை வர்த்தகம் கடந்த 100 நாட்களில் 15.5 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு 1.48 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 296ஆக உயர்ந்துள்ளது.

'கட்டில்' பட பணிக்கிடையே ஸ்ரீகாந்த் தேவாவின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இந்தாண்டு எளிமையான முறையில் கட்டில் திரைப்பட இயக்குநருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details