தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - ETV Bharat Top 10

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am

By

Published : Sep 25, 2020, 11:24 AM IST

முன்னெப்போதும் இல்லாத சூழலில் இந்தியா-சீனா உறவு: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா-சீனா உறவு முன்னெப்போதுமில்லாத நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது!

பெங்களூரு: தேசிய புலனாய்வு முகமை பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய சையது சாதிக் அலி என்ற முக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றிய ராணுவ வீரர், இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

காஷ்மீர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய ராணுவ வீரர் மற்றும் இரண்டு பெண்கள் என மூவரும் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்த தெலங்கானா ஏசிபி மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்: சட்டவிரோதமாக 70 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ள மல்கஜ்கிரி துணை ஆணையர் மீது ஊழல் தடுப்பு பணியகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்கள் வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருநங்கைகள் மூலம் குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் திருநங்கைகள் மூலமாக குற்றச்செயல்களை தடுப்பதற்காக, இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (செப்.24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மீது புரட்சி பாரதம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக குழப்பத்தில் உள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குத்தகைப் பணம் தருவதில் குளறுபடி : வீட்டு உரிமையாளரின் மகன் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பலி

சென்னை : அரும்பாக்கத்தில் வீட்டின் குத்தகைப் பணம் தருவதில் ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரின் மகன் இரண்டாவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார்.

அம்மாவோடு ஜாலியாக உடற்பயிற்சி மேற்கொண்ட சம்யுக்தா

தனது அம்மாவுடன் வீட்டிலிருந்தபடியே ஜாலியாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் சம்யுக்தாவின் புதிய வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக லைக் செய்துள்ளனர்.

கரோனா தொற்று அச்சம்: கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

கரோனா தொற்று அச்சம் காரணமாக நவம்பர் மாதம் நடைபெற இருந்த சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details