தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - ETVBharat Top 10 News

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am

By

Published : Sep 24, 2020, 11:16 AM IST

குட்கா விவகாரம் - உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

சட்டப்பேரவைக்கு திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உட்பட 18 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

போலி ஆவணங்கள் வைத்து கடன் வழங்கிய வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை!

கோயம்புத்தூர்: போலி ஆவணங்களை வைத்து கடன் வழங்கிய கனரா வங்கி மேலாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020: உயர்கல்வித் துறை கருத்து கேட்பு தொடக்கம்

சென்னை: தேசிய கல்வி கொள்கையில் உயர்கல்வித் துறையில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் உயர்கல்வித் துறை கருத்துகளை கேட்கிறது.

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தேமுதிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான முன்பதிவு கட்டணத்தை திருப்பி அளிக்கக் கோரிய மனு - விசாரணை ஒத்திவைப்பு!

டெல்லி : கரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பாக முன்பதிவாகி ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் முழு கட்டணத்தைத் திரும்ப அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தானே கட்டட விபத்தின் உயிரிழப்பு 41ஆக அதிகரிப்பு!

மும்பை: தானே மாவட்டத்தில் ஏற்பட்ட குடியிருப்புக் கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

சென்னாபுரம் என்கவுன்ட்டர்: மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஹைதராபாத் : காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

ஓஎன்ஜிசியில் ஏற்பட்ட வாயு கசிவால் தீ விபத்து!

காந்திநகர்: சூரத் நகரில் ஓஎன்ஜிசியின் முக்கிய பைப் லைனில் ஏற்பட்ட வாயு கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

'ப்ளாக் விடோ' வெளியாகும் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

வாஷிங்டன்: ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ளாக் விடோ' படம் வெளியாகும் தேதி தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், நுகர்வோரை பாதுகாக்கும் விதிமுறைகள் தேவை: மகேந்திர தேவ் நேர்காணல்

மும்பை: மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் சுரண்டப்படாமல் பாதுகாக்கும் வகையில் விதிமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என வேளாண் துறை வல்லுனர் மகேந்திர தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details