தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@11 AM - தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 6, 2021, 10:52 AM IST

1. மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பப்ஜி உள்ளிட்ட ஆன் லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசி பணமோசடி செய்த மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

2. பிரதமரின் உயிர் காக்கும் விருது - மகிழ்ச்சியில் முதல்நிலை காவலர்

பிரதமரின் உயிர்காக்கும் விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பட்டுக்கோட்டை காவல்நிலைய முதல்நிலை காவலர் ராஜ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

3. பள்ளிகள் திறப்பு - விரைவில் அறிவிப்பு?

கரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4. சமையல் எரிவாயு விலை உயர்வு - சமையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தண்டையார்பேட்டை அருகே சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சமையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5. புதுச்சேரி மாநில பட்ஜெட் ரூ.9250 கோடி - ஒன்றிய அரசுக்கு கோப்பு அனுப்பி வைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் இந்தாண்டு பட்ஜெட் ரூபாய் 9250 கோடிக்கு தாக்கல் செய்திட ஒன்றிய அரசின் அனுமதி கோரி கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

6. சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மரியாதை!

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 120ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

7. நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

8. ஆக்ஸிஜன் பற்றாக்குறை- இந்தோனேசியாவில் 63 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

9. 1000 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 617 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

10. நடிகர் பொன்வண்ணன் மகள் திருமணம் - முதலமைச்சர் நேரில் வாழ்த்து!

நடிகர்கள் பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ABOUT THE AUTHOR

...view details