தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம்TOP 10 NEWS @ 11 AM - TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 AM
11 AM

By

Published : Apr 13, 2021, 11:09 AM IST

1. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

2. விதியை மீறிய கொண்டாட்டம்: வீதியில் நின்ற பறவைக்காவடி

விருதுநகர்: கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி நேர்த்திக்கடன் செலுத்தும்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

3. சொந்தப் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்றிய ஆத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள்!

செங்கல்பட்டு: நிறுவன பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்ற முயன்ற ஆத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலரால் தேவையற்ற பரபரப்பு ஏற்பட்டது.

4. திருவள்ளூரில் கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்

திருவள்ளூர்: கரோனா பரவலைத் தடுத்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுவருவதாகத் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

5. மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா: பொதுமக்கள் உற்சாகம்

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் வலை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களைப் பிடித்து பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

6. பெங்களூருவில் சோப்பு டப்பாவில் போதைப்பொருள் விநியோகம்: மூவர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் போதைப்பொருள்களை சோப்பு டப்பாவில் விநியோகம்செய்த மூவரை, காவல் துறையினர் கைதுசெய்தனர்

7. மம்தாவின் தர்ணாவிற்கு ஸ்டாலின் ஆதரவு

தனக்குப் பரப்புரை செய்ய தடைவிதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

8. யுகாதி, தமிழ்ப் புத்தாண்டு: மெட்ரோவின் அதிரடி சிறப்புச் சலுகை!

சென்னை: யுகாதி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிரடி சிறப்புச் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

9. ஐபிஎல் 2021: மும்பை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

மும்பையில் இன்றிரவு நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

10. தாத்தாவுக்காக தாயகம் திரும்பிய இளவரசர் ஹாரி!

இளவரசர் ஹாரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மனைவி மேகனுடன் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், தனது தாத்தா பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக் முதன்முறையாக பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details